முரண்பாடுகளை களைய புதுவை தேர்தல் ஆணையருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: 'உள்ளாட்சி தேர்தலை, அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக, சட்டத்துக்கு புறம்பாக நடத்தலாம் என்பது அல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் உள்ள

சென்னை: 'உள்ளாட்சி தேர்தலை, அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக, சட்டத்துக்கு புறம்பாக நடத்தலாம் என்பது அல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி நகராட்சியில், ஆதிதிராவிட சமூகத்தினருக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் உள்ள வார்டுகளை ஒதுக்காமல், குறைவான எண்ணிக்கையில் உள்ள வார்டுகளை ஒதுக்கி உள்ளனர். எனவே, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளின்படி, ஆதிதிராவிடர்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என கூறப் பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்த போது, -பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கிய அடிப்படை உள்ளிட்ட பல முரண்பாடுகள், கவனத்துக்கு வந்துள்ளன. இதுகுறித்து, புதுச்சேரி அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

வழக்கு, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பல்வேறு முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவற்றை சரி செய்யும்படி, புதுச்சேரி தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'விசாரணை, வரும் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. வெளிச்சத்துக்கு வந்துள்ள பல முரண்பாடுகளுக்கு, தீர்வு காணப்படும் என நம்புகிறோம். வரும் 7 ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறலாம் என்பதால், தேர்தல் அட்டவணையில் இடையூறு இல்லை. அவசரமாக, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக, சட்டத்துக்கு புறம்பாக நடத்தலாம் என்பது அல்ல' என கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X