கோவிஷீல்டு செலுத்தினேன்... உயிர் பிழைத்தேன்: ஐ.நா., தலைவர்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜெனிவா: 'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டேன்; அதனால் உயிர் பிழைத்துவிட்டேன்' என, ஐ.நா., தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார். ஐ.நா., பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவைச் சேர்ந்த அப்துல்லா ஷாகித் பொறுப்பேற்று உள்ளார். அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்., 1) நடைபெற்றது. அதில், 'ஏதெனும் கோவிட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க

ஜெனிவா: 'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டேன்; அதனால் உயிர் பிழைத்துவிட்டேன்' என, ஐ.நா., தலைவர் அப்துல்லா ஷாகித் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஐ.நா., பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவைச் சேர்ந்த அப்துல்லா ஷாகித் பொறுப்பேற்று உள்ளார். அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்., 1) நடைபெற்றது. அதில், 'ஏதெனும் கோவிட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டி உள்ளதா; உலக சுகாதார அமைப்பு ஏதெனும் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க உள்ளதா' உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து ஷாகித் பேசியதாவது:


latest tamil news



பிரிட்டன் நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்தி கொண்டுள்ளேன். நான் உயிர் பிழைத்துவிட்டேன்.
எத்தனை நாடுகளில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, எனக்கு தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் கேட்ட கேள்விக்கு மருத்துவ நிபுணர்தான் பதிலளிக்க வேண்டும். நான் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாகவும், வணிக ரீதியாகவும் இந்தியா 100 நாடுகளுக்கு 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இருப்பினும் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. இந்தியாவின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, செப்., 22ம் தேதி இங்கிலாந்து தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baluchen - Chennai ,யூ.எஸ்.ஏ
03-அக்-202107:48:24 IST Report Abuse
baluchen இப்படி சொன்னா இங்க உள்ள குல்லா கண்களுக்கு பிடிக்காதே ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202106:25:08 IST Report Abuse
Mani . V அப்பு ரொம்ப பேசவேண்டாம். பாதுகாப்பானது என்று முதல் நாள் பேட்டி கொடுத்தவர்கள் அடுத்தநாள் இல்லை.
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
06-அக்-202114:08:52 IST Report Abuse
kudiyanavanநீ முதல்ல நேர நின்னு போஸ் கொடு ....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-அக்-202103:36:36 IST Report Abuse
meenakshisundaram ராகுல் காந்தி கோவி shield போட்டுக்கொள்ள வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X