பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சீலநாயக்கன்பட்டி: உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால், சேலம், குகை ரோட்டரி கிளப், தரண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை, ரோட்டரி கிளப் மூலம் வரும் பெண்கள், அவரது உறவிர்களுக்கு, 'மேமோகிராம்' பரிசோதனை, 'பேப்ஸ்மியர்' பரிசோதனையை, இம்மாதம் முதல் டிசம்பர் வரை, தரண் மருத்துவமனையில் இலவசமாக நடத்துகிறது.

சீலநாயக்கன்பட்டி: உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால், சேலம், குகை ரோட்டரி கிளப், தரண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை, ரோட்டரி கிளப் மூலம் வரும் பெண்கள், அவரது உறவிர்களுக்கு, 'மேமோகிராம்' பரிசோதனை, 'பேப்ஸ்மியர்' பரிசோதனையை, இம்மாதம் முதல் டிசம்பர் வரை, தரண் மருத்துவமனையில் இலவசமாக நடத்துகிறது. இதுகுறித்து, தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்வராஜா கூறியதாவது: மார்பகத்தில் கட்டி, தோல் சுருக்கம், மார் காம்பில் நீர்/ரத்தம் வழிதல், மார்பக வடிவ மாறுபாடு போன்றவை, மார்பக புற்றுநோயின் அறிகுறி. மேமோகிராம் பரிசோதனை மூலம் ஆரம்ப நாளில் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக மாதப்போக்கு, வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிப்பதில் வலி போன்றவை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறி. 'பேப்ஸ்மியர்' பரிசோதனை மூலம், ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். தரண் மருத்துவமனையின், புற்றுநோய் பிரிவான, தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டரில், அனைத்து வகை புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில், முதல்வர் காப்பீடு திட்டம், தனியார் காப்பீடு திட்டத்தில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X