பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் உள்ள வி.சி., நிர்வாகிகளை சந்தித்த மாநில பொதுச்செயலர்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், கே.மோரூரில், பொது இடத்தில் வி.சி., கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதுதொடர்பாக, அக்கட்சி நிர்வாகிகள், 17 பேரை, போலீசார் கைது செய்து, ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர். நேற்று, அக்கட்சி மாநில பொதுச்செயலர் வன்னியரசு, சிறையில் உள்ள, 17 பேரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பொது இடத்தில்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், கே.மோரூரில், பொது இடத்தில் வி.சி., கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதுதொடர்பாக, அக்கட்சி நிர்வாகிகள், 17 பேரை, போலீசார் கைது செய்து, ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர். நேற்று, அக்கட்சி மாநில பொதுச்செயலர் வன்னியரசு, சிறையில் உள்ள, 17 பேரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பொது இடத்தில் அனைத்து கட்சியினரும் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றுவர். கே.மோரூரில், கொடி ஏற்றவிடாமல் கலவரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வி.சி., நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் மிரட்டும் தொனியில் பேசியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலினிடம், கட்சி தலைமை மூலம் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X