பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி அலுவலகம் முன் தன்னார்வலர்கள் தர்ணா

Added : அக் 02, 2021
Share
Advertisement
மேட்டூர்: கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள், மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலை தடுக்க, மேட்டூர் நகராட்சி சார்பில், கடந்த ஜூன் மாதம் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்த, 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தினமும், 250 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்ததால், தன்னார்வலர்கள்

மேட்டூர்: கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள், மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலை தடுக்க, மேட்டூர் நகராட்சி சார்பில், கடந்த ஜூன் மாதம் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்த, 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தினமும், 250 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்ததால், தன்னார்வலர்கள் கடந்த செப்., 10ல் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜூன் ஊதியம் வழங்கிய நிலையில், ஜூலை, ஆகஸ்ட் ஊதியம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள், நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் அண்ணாலை, அவர்களை அலுவலகம் வரழைத்து பேசி, அக்., 5க்குள் நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, தன்னார்வலர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X