சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தியேட்டரில் பட்டாசு வெடிப்பு; ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆத்தூர்: தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததால், ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தியேட்டரில், நேற்று, 'ருத்ர தாண்டவம்' படம் வெளியிடப்பட்டது. முதல் காட்சிக்கு, சேலம் கிழக்கு பா.ம.க., மாவட்ட செயலர் நடராஜன் சார்பில், இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. பா.ம.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர், திரைப்படத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது, மாவட்ட செயலர்

ஆத்தூர்: தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததால், ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தியேட்டரில், நேற்று, 'ருத்ர தாண்டவம்' படம் வெளியிடப்பட்டது. முதல் காட்சிக்கு, சேலம் கிழக்கு பா.ம.க., மாவட்ட செயலர் நடராஜன் சார்பில், இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. பா.ம.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர், திரைப்படத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது, மாவட்ட செயலர் உள்ளிட்டோர், பூசணிக்காயில் கற்பூரம் காட்டினர். சிலர் பட்டாசுகளை பற்ற வைத்து வீசினர். இதனால், தியேட்டர் இருக்கையில் அமர்ந்திருந்தவர், அலறியடித்து ஓடினர். தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு தடை உள்ள நிலையில், பா.ம.க.,வினர் பட்டாசு வெடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால், ஆத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X