சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவர்கள் மூவர் காயம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளியை சேர்ந்தவர்கள் சஞ்சய், 19, முனுசாமி, 19, சந்தோஷ்குமார், 19. மூவரும் நண்பர்கள். இவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின்பு, 5:00 மணியளவில் யமஹா பைக்கில் மூவரும் தங்கள் கிராமத்திற்கு சென்று

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த திப்பிரெட்டிஹள்ளியை சேர்ந்தவர்கள் சஞ்சய், 19, முனுசாமி, 19, சந்தோஷ்குமார், 19. மூவரும் நண்பர்கள். இவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின்பு, 5:00 மணியளவில் யமஹா பைக்கில் மூவரும் தங்கள் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். வெங்கடசமுத்திரம் அருகே வரும்போது விழுதிப்பட்டியை சேர்ந்த குமரேசன், 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவன் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் வந்தார். அப்போது இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் சஞ்சய், முனுசாமி, சந்தோஷ் குமார் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X