மதுபானம், குட்கா கடத்தியவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபானம், குட்கா கடத்தியவர்கள் கைது

Added : அக் 02, 2021
Share
ஓசூர்: ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., காளியப்பன் மற்றும் போலீசார், கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநில மதுபானங்கள் கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், பைக்கில் வந்த திருப்பத்தூர் காந்தி நகரை சேர்ந்த விக்னேஷ், 25, தாமேந்திரிமுத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுந்தர், 23, என்பது

ஓசூர்: ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., காளியப்பன் மற்றும் போலீசார், கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநில மதுபானங்கள் கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், பைக்கில் வந்த திருப்பத்தூர் காந்தி நகரை சேர்ந்த விக்னேஷ், 25, தாமேந்திரிமுத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுந்தர், 23, என்பது தெரிந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 53 ஆயிரத்து, 920 ரூபாய் மதிப்புள்ள, 294 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, ஆக்சஸ் மொபட்டில் குட்கா கடத்தி சென்ற, சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த லாரி மெக்கானிக் வெங்கடேஷ், 41, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3,705 ரூபாய் மதிப்புள்ள, 5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X