கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு கோர்ட்டில் மீண்டும் விசாரணை

Added : அக் 02, 2021
Share
Advertisement
நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் மீண்டும் செயல்பட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, 23 கோர்ட்களில் விரைவாக விசாரணை நடத்த, ஐகோர்ட் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.நில மோசடி தொடர்பான புகாரை விசாரிப்பதற்கு, 2011ல் நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நில அபகரிப்பு வழக்குகளுக்கு சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது.தமிழகத்தில், சென்னை,

நில அபகரிப்பு சிறப்பு கோர்ட் மீண்டும் செயல்பட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, 23 கோர்ட்களில் விரைவாக விசாரணை நடத்த, ஐகோர்ட் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நில மோசடி தொடர்பான புகாரை விசாரிப்பதற்கு, 2011ல் நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நில அபகரிப்பு வழக்குகளுக்கு சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது.தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட, 23 மாவட்டங்களில் சிறப்பு கோர்ட் துவங்கப்பட்டன. கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்துக்கு எதிராக, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், நிலஅபகரிப்பு சிறப்பு கோர்ட்டை ரத்து செய்து, 2015 பிப்ரவரியில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு நிரந்தர தடை கோரி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்தது.கடந்த 24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது, நில அபகரிப்பு நீதிமன்றத்தில், தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, தமிழகத்தில், 23 மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நில அபகரிப்பு வழக்கு சிறப்பு கோர்ட்டில் மீண்டும் விசாரணையை துவங்கி, வழக்குகளை விரைந்து முடிக்க, அந்தந்த மாவட்ட நீதிமன்றத்துக்கு, சென்னை ஐகோர்ட் பதிவாளர் தனபால், நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X