பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் சான்று வாங்க மருத்துவமனையில் காத்திருப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகள் சான்று வாங்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள், அரசு வேலை மற்றும் திட்டங்கள் பெற ஏதுவாக மாற்றுத்திறன் சான்று வாங்க வேண்டும். இதற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நேற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் காத்து கிடந்தனர்.இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம் கூறியதாவது: கலெக்டர்

கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகள் சான்று வாங்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள், அரசு வேலை மற்றும் திட்டங்கள் பெற ஏதுவாக மாற்றுத்திறன் சான்று வாங்க வேண்டும். இதற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நேற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் காத்து கிடந்தனர்.


இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில், மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடப்பது வழக்கம். ஆனால், கொரோனா காலகட்டங்களில் முகாம் நடக்கவில்லை. விபரம் தெரியாமல் வரும் மாற்றுத்திறனாளிகள் இதனால் குழப்பமடைகின்றனர். அவர்களை அரசு மருத்துவமனை அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறி அனுப்புவதால், பலர் அரசு மருத்துவமனையில் காத்து கிடக்கின்றனர். வரும் வாரம் முதல், கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் துவங்கவுள்ளதால் அங்கேயே அவர்கள் தங்கள் சான்றுகளை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X