பொது செய்தி

தமிழ்நாடு

மோசமான அங்கன்வாடி கட்டடம்; அதிகாரிகள் ஆய்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வேம்பள்ளி கிராமத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 53க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மூன்று ஆண்டுக்கு முன், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழ துவங்கியது. அதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள இட நெருக்கடியான தனியார் ஓட்டு கட்டடத்திற்கு,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வேம்பள்ளி கிராமத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 53க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மூன்று ஆண்டுக்கு முன், அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழ துவங்கியது. அதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள இட நெருக்கடியான தனியார் ஓட்டு கட்டடத்திற்கு, அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டது. அதற்கு மாதந்தோறும், 700 ரூபாய் வாடகை கட்டப்பட்டு வருகிறது. எனவே, பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக, நமது நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், நேற்று பழைய கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுமக்களிடம் உறுதியளித்தனர். பொறியாளர் விமலா, பஞ்., தலைவர் கலைச்செல்வி ராமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X