பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயார்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அரசின் முதன்மை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையரும், கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பீலா ராஜேஷ் கூறியதாவது:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அரசின் முதன்மை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையரும், கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார்.


கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பீலா ராஜேஷ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 47 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்காக, 2,544 முதல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மரங்கள் விழும் பட்சத்தில் அதை அகற்றும் வகையில், மீட்பு பணிக்கான பொக்லைன் இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. அரசின் சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி மாவட்டத்தில், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மின் பாதிப்பு சரிப்படுத்துதல், கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஓசூர் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, எஸ்.பி., சாய் சரண் தேஜஸ்வி, டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, திட்ட அலுவலர் தேன்மொழி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X