பொது செய்தி

தமிழ்நாடு

குண்டேரிப்பள்ளம் நீர்மட்டம் பலத்த மழையால் உயர்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோபி: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால், குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம், ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்தது. ஈரோடு மாவட்டம், கோபி, கொங்கர்பாளையம் கிராமத்தில், குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 42 அடிக்கு நீர் தேக்கலாம். இதன் மூலம், 2,498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம், 33.15 அடியாக இருந்தது. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு

கோபி: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால், குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம், ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்தது. ஈரோடு மாவட்டம், கோபி, கொங்கர்பாளையம் கிராமத்தில், குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 42 அடிக்கு நீர் தேக்கலாம். இதன் மூலம், 2,498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம், 33.15 அடியாக இருந்தது. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, குன்றி, விளாங்கோம்பை, கெம்பனூர், மல்லியம் துருவம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 51.6 மி.மீ., மழை கொட்டியது. இதனால் நேற்று காலை முதல் அணைக்கு வினாடிக்கு, 83 கன அடி நீர் வரத்தானது. இதனால் அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து, 34.79 அடியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X