பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையங்களில் மழை நீர் சூழ்ந்து நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் அதிருப்தி

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோபி: கோபியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், கொள்முதல் நிலையங்களில் மழைநீர் சூழ்ந்து, நெல் குவியல் மற்றும் மூட்டை நனைந்ததால், விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் தடப்பள்ளிஅரக்கன்கோட்டை பாசனத்தில், முதல் போக நெல் அறுவடை முடிந்துள்ளது. கொள்முதல் செய்ய, கோபியில், 34 இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கோபியில்,

கோபி: கோபியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், கொள்முதல் நிலையங்களில் மழைநீர் சூழ்ந்து, நெல் குவியல் மற்றும் மூட்டை நனைந்ததால், விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம் தடப்பள்ளிஅரக்கன்கோட்டை பாசனத்தில், முதல் போக நெல் அறுவடை முடிந்துள்ளது. கொள்முதல் செய்ய, கோபியில், 34 இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கோபியில், 41.4 மி.மீ., கொடிவேரியில், 32 மி.மீ., மழை பெய்தது. இதனால் கொள்முதல் நிலையங்களில், தார்பாய் கொண்டு குவிக்கப்பட்டுள்ள, நெல் குவியலுக்குள் மழைநீர் புகுந்தது. குறிப்பாக நஞ்சகவுண்டம்பாளையம் கொள்முதல் நிலையத்தில், நெல் குவியலை மழைநீர் சூழ்ந்தது. பொலவக்காலிபாளையம் கொள்முதல் நிலையத்திலும், 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் நனைந்தன. இதனால், நனைந்த நெல் குவியல் மற்றும் மூட்டைகளை, உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் மழை பெய்தால், கொள்முதல் நிலையத்துக்கு சென்று, நெல்லை பாதுகாக்க வேண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் கொள்முதல் நிலையங்களில், நெல்லை பாதுகாக்க வசதியாக, தகர கூடார வசதி வேண்டும். மூட்டைகளை அடுக்க வசதியாக, மழைநீர் அடியில் செல்லும் வகையில், பலகை வசதி வேண்டும். கொள்முதல் நிலையங்கள், கட்டாந்தரையாக இல்லாமல், கான்கிரீட் தளம் வசதியுடன் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'கோபியில் ஓரிரு இடங்களில், கான்கிரீட் தளத்துடன், கொள்முதல் நிலையம் உள்ளது. மூட்டைகளை அடுக்க வசதியாக, பலகை உள்ளது. பெருந்துறை கொள்முதல் மையத்தில், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவையுள்ள விவசாயிகள் கேட்டு பெறலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X