தமிழ்நாடு

ஒரு நாள் மழைக்கே... தாங்காத ஈரோடு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவில் கடுமையாக பெய்த மழையால், காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் சென்றது.தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் இரு தினங்களாக மழை பெய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, பவானி, கோபி என மாவட்டம் முழுவதிலும் கனமழை பெய்தது. நேற்று நள்ளிரவு முதல் காலை, 6:30 மணி வரை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியும்,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவில் கடுமையாக பெய்த மழையால், காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் சென்றது.


தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் இரு தினங்களாக மழை பெய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, பவானி, கோபி என மாவட்டம் முழுவதிலும் கனமழை பெய்தது. நேற்று நள்ளிரவு முதல் காலை, 6:30 மணி வரை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வடிகால்களில் முழு அளவில் தண்ணீர் ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ஈரோடு, கருங்கல்பாளையம் கற்பகம் லே-அவுட் முதலாவது வீதி மிகவும் தாழ்வாக உள்ளதால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பவானி சாலை, ஆர்.என்.புதூர், அக்ரஹாரம், மாயபுரம் உட்பட பல பகுதியில் சாக்கடை நீருடன் மழை வெள்ள நீர் கலந்து வெள்ளமாக ஓடியது. இம்மழை நீரால் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் மிக அதிக அளவில் தண்ணீர் சென்றது. அணைக்கட்டு பகுதியில் ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்றதாலும், கழிவு நீர் கலந்ததாலும் நுரையுடன் வெள்ள நீர் வெளியேறிது. வெண்டிப்பாளையம் ரயில்வே கீழ்பாலம், ரங்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கீழ்பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி, மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். மாவட்டத்தில் அதிக மழை பெய்து, பவானி, காவிரி ஆற்றில் தண்ணீர் அளவு உயர்ந்ததுடன், பள்ளிபாளையம் அருகே ஓடையும், அதை ஒட்டிய ஒரு குளமும் உடைந்ததால் அந்த வெள்ள நீர் காவிரியில் சேர்ந்தது. இதனால், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி பழைய பாலத்தை தொட்டு செல்லும் அளவுக்கு தண்ணீர் சென்றது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி கவுந்தப்பாடியில், 144.2 மி.மீ., பவானி-103.6, ஈரோடு-100, கொடுமுடி-98.2, பெருந்துறை-64, வரட்டுப்பள்ளம்-61.2, மொடக்குறிச்சி-54, குண்டேரிப்பள்ளம்-51.6, இலந்தைகுட்டைமேடு-49.4, கோபி-41.4, நம்பியூர்-36, கொடிவேரி-32.2, அம்மாபேட்டை-30, சத்தியமங்கலம்-27, தாளவாடி-18, பவானிசாகர்-14.4, சென்னிமலை-11 மி.மீ., மழை பதிவானது. பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 101.01 அடி, அணைக்கு வினாடிக்கு, 6,644 கனஅடியாக நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,200 கனஅடி வெளியேற்றினர்.


* ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் கடும் மின்னல், இடியுடன் மழை பெய்தது. ஈரோடு மாநகரில், 100 மி.மீ., கவுந்தப்பாடியில், 144 மி.மீ., மழை கொட்டியது. இதனால், ஈரோடு வெண்டிபாளையம் கீழ்பாலம், சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், இரண்டு முதல், நான்கடி வரை தண்ணீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து தடைபட்டது. ஈரோடு கொல்லம்பாளையம், லோகநாதபுரத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 2020ல் கட்டப்பட்ட, 191 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி தண்ணீர் தேங்கியது. சுற்றுச்சுவர் இடிந்து, 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் சேதமடைந்தது. இரவாக இருந்ததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு காமராஜ் மேல்நிலைப்பள்ளி பகுதி, ஆர்.கே.வி., சாலை, கொங்காலம்மன் கோவில் பகுதி, பழையபாளையம் என பல பகுதியில் முறையான சாக்கடை வடிகால் இன்றி வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஒரு நாள் மழையைக்கூட, ஈரோடு மாநகராட்சி பகுதி தாங்க முடியாத நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X