சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: கிருஷ?ணராயபுரம் மற்றும் தோகைமலை அருகே, ஆடு மேய்க்கச் சென்ற மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் அடுத்த வீரணாம்பட்டியைச் சேர்ந்த காசிராஜன் மகன் நவீன்குமார், 13; எட்டாம் வகுப்பு மாணவர். ஆறுமுகம் மகன்கள் வசந்த், 12; எட்டாம் வகுப்பு மாணவர். மயில்முருகன், 10. ஆறாம் வகுப்பு மாணவர். நேற்று மதியம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ?ணராயபுரம் மற்றும் தோகைமலை அருகே, ஆடு மேய்க்கச் சென்ற மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.


கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் அடுத்த வீரணாம்பட்டியைச் சேர்ந்த காசிராஜன் மகன் நவீன்குமார், 13; எட்டாம் வகுப்பு மாணவர். ஆறுமுகம் மகன்கள் வசந்த், 12; எட்டாம் வகுப்பு மாணவர். மயில்முருகன், 10. ஆறாம் வகுப்பு மாணவர். நேற்று மதியம் மூன்று பேரும் சிவலிங்கபுரம் தனியார் நிலத்திலுள்ள குட்டை அருகில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தனர். முன்தினம் நள்ளிரவு பெய்த மழையால் குட்டையில், 10 ஆடி ஆழத்துக்கு மழைநீர் தேங்கியிருந்தது. அங்கு சென்ற சிறுவர்கள் குட்டையில் இறங்கினர். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினர். அவர்களுடன் சென்ற மற்றொரு சிறுவன் ஓடிச் சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தார். அப்பகுதியினர் சிறுவர்களை மீட்டபோது, சிறுவர்கள் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


* தோகைமலை அருகே ஆர்.டி.மலை பஞ்., அழகாபுரியைச் சேர்ந்தவர் செல்வம் மகள் லோகேஸ்வரி, 12. ஏழாம் வகுப்பு மாணவி. நேற்று காலை லோகேஸ்வரியும், அவரது தாய் இந்திராணியும் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றனர். அருகே தனியாருக்கு சொந்தமான தரிசு காட்டில் கிராவல் மண் அள்ளியதால், 10 அடி ஆழத்தில் குழி இருந்துள்ளது. முன்தினம் இரவு பெய்த மழைக்கு குழியில் மழைநீர் நிரம்பியிருந்தது. குழிக்கு அருகே சென்ற லோகேஸ்வரி, மண் சரிவு ஏற்பட்டு குழிக்குள் விழுந்தார். நீரில் மூழ்கியவர் மூச்சு திணறி இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், கிராம மக்கள், அனுமதியின்றி தரிசு காட்டில் கிராவல் மண் அள்ளிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி- தோகைமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., தட்சணாமூர்த்தி, டி.எஸ்.பி., ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கை விட்டனர். தொடர்ந்து தரிசு காட்டில் தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது. மறியலால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X