சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கையாடல்: விற்பனையாளர் 3 பேர் சஸ்பெண்ட்

Added : அக் 02, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தான, 189 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில், அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும், அரசு டாஸ்மாக் கடைகளில், முறைகேடு நடப்பதாக தொடர்பாக, அவ்வப்போது ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தான, 189 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில், அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும், அரசு டாஸ்மாக் கடைகளில், முறைகேடு நடப்பதாக தொடர்பாக, அவ்வப்போது ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு சில டாஸ்மாக் கடைகளில், முறைகேடு நடப்பதாக, மண்டல மேலாளருக்கு புகார் சென்றது. அதனடிப்படையில், சேலம் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார், நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 37 ஆயிரத்து, 790 ரூபாய் இருப்பு குறைவு (கையாடல்) செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, விற்பனையாளர்கள் சக்திவேல், தமிழரசன், ஆர்.சக்திவேல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X