பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா 33 டி.எம்.சி., நீர் நிலுவை

Added : அக் 02, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 102 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கர்நாடகா, 33 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் ஒரு பகுதி தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை, அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 102 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கர்நாடகா, 33 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் ஒரு பகுதி தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை, அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. கடந்த ஜூன், 12 முதல் நேற்று வரை, 102 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை, கர்நாடகா தமிழகத்துக்கு, 123.14 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். கடந்த, 30 வரை, 90 டி.எம்.சி., வழங்கிய நிலையில், 33 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், பாசன நீர் திறப்பு, நேற்று மாலை, 4:00 மணி முதல், வினாடிக்கு, 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X