அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வியை மாநில பட்டியலிலிருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதால் தான் நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை அன்புமணி பேச்சு

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராணிப்பேட்டை: கல்வியை மாநில பட்டியலிலிருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதால் தான் நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி பகுதியில் இன்று அவர் பேசியதாவது:தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம். காந்தி


ராணிப்பேட்டை: கல்வியை மாநில பட்டியலிலிருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதால் தான் நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி பகுதியில் இன்று அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம். காந்தி பிறந்த நாளான இன்று சுய ராஜ்யம் தேவை. இது கிராமங்களில் தான் உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளம் உள்ளாட்சி தேர்தல்.
உள்ளாட்சி தேர்தல் பாராளுமன்ற, சட்டசபையை விட வலிமையானது. எனவே நல்லவர்களையும், வலிமையானவர்களையும் தேர்வு செய்யுங்கள். கிராம சபைகள் மூலம் மக்கள் தங்கள் குறைகளை தீர்மானம் நிறைவேற்றி உள்ளாட்சி பிரநிதிகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு மட்டும் கொடுத்தனர். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அதனால் தான் நாம் தற்போது தனித்து போட்டியிடுகிறோம்.அரை நுாற்றாண்டு காலம் உழைத்து தான் ஸ்டாலின் முதல்வர் ஆகும் கனவை நனவாக்கினார். அதை போல பா.ம.க., வும் தனது கனவை நினைவாக்க பாடுபடுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் உருவானதை பா.ம.க., போராடித் தான் பெற்றது. கச்சத்தீவை மீட்க 1,500 சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதை நிறைவேற்றவில்லை.மாநில சுயாட்சியை அண்ணா கோரிக்கை வைத்தார். அது ஞாயமானது. அதனால் தான் பா.ம.க., வும் அக்கேரிக்கையை வரவேற்கிறது. கிராம ஊராட்சியின் அதிகாரம் சென்னையிலும், மாநிலங்களின் அதிகாரம் டெல்லியில் குவிந்துள்ளது.

தற்போது வந்துள்ள நீட் தேர்வு பிரச்சனை சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது. கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதன் விளைவாகத்தான் நீட் தேர்வை முறையாக எதிர்க்க முடியவில்லை.
இதனால் மாநிலங்களின் உரிமைகள் பறி போய் விட்டது.

எனவே, எல்லா சமூதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு தேவை என பா.ம.க., போராடி வருகிறது.10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தி.மு.க.,வும், அ.தி.மு.க., வும் ஆதரவளித்தது. இவ்வாறு அவர் பேசினார். மாநிலத்தலைவர் மணி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
03-அக்-202106:17:11 IST Report Abuse
 Muruga Vel கச்ச தீவு மீட்பதில் என்ன சிக்கல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X