குழந்தையை கடத்திய மூவர் கைது குண்டர் சட்டம் பாயும்: டி.ஐ.ஜி., எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கடத்திய மூவர் கைது குண்டர் சட்டம் பாயும்: டி.ஐ.ஜி., எச்சரிக்கை

Added : அக் 02, 2021
Share
கோவை: ''குழந்தை கடத்தலில் ஈடுபட்டால், குண்டர் சட்டம் பாயும்,'' என, கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 28-ம் தேதி அடையாளம் தெரியாத சிலர் சங்கீதாவின் ஐந்து மாத குழந்தையை கடத்திச் சென்றனர்.ஆனைமலை போலீசார்

கோவை: ''குழந்தை கடத்தலில் ஈடுபட்டால், குண்டர் சட்டம் பாயும்,'' என, கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 28-ம் தேதி அடையாளம் தெரியாத சிலர் சங்கீதாவின் ஐந்து மாத குழந்தையை கடத்திச் சென்றனர்.ஆனைமலை போலீசார் விசாரித்தனர்.

வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 20 கி.மீ., சுற்றளவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் குழந்தையை கடத்திச் சென்றவர்கள் ஆனைமலை அங்கலக்குறிச்சியில் இருப்பது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தனர்.

குழந்தையை கடத்திச் சென்றது பொள்ளாச்சி சேத்துமடையை சேர்ந்த பெயின்டர்கள் ராமர், 49, முருகேசன், 39 எனத் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி கூறியதாவது: பொள்ளாச்சி அங்காளகுறிச்சியை சேர்ந்தவர் முத்துபாண்டி, 51. தனியார் கயிறு நிறுவன மேலாளர். இவருக்கு குழந்தையில்லை. இதனால், ஏதாவது ஒரு குழந்தையை விலைக்கு வாங்கித் தருமாறு ராமர், முருகேசனிடம் கூறினார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் சங்கீதாவின் குழந்தையை கடத்தி சென்று, ரூ.90 ஆயிரத்துக்கு முத்துபாண்டியிடம் விற்பனை செய்தனர்.வழக்கில் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் யாராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; குண்டர் சட்டம் பாயும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X