பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.31 லட்சம் பறிமுதல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 31.45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பதிவுத்துறை, 'டாஸ்மாக்' மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட 38 மாவட்ட அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், மாநிலம் முழுதும் செப்., 30ல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அன்று கணக்கில் காட்டப்படாத 26 லட்சத்து 99 ஆயிரத்து 335 ரூபாய் பறிமுதல்

சென்னை: அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 31.45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதிவுத்துறை, 'டாஸ்மாக்' மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட 38 மாவட்ட அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், மாநிலம் முழுதும் செப்., 30ல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அன்று கணக்கில் காட்டப்படாத 26 லட்சத்து 99 ஆயிரத்து 335 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய்க்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் நடந்தது.இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகை தொடர்பான இறுதிப் பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வெளியிட்டனர். அதன்படி, 31 லட்சத்து 45 ஆயிரத்து 55 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3.31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X