பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மிதக்கும் 'சோலார்' திட்டத்தை கைவிட்டது வாரியம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:தேனி, சேலம், ஈரோடில் உள்ள அணைகளுக்கு அருகே, தண்ணீரில் மிதக்கும், 'சோலார்' எனப்படும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை, மின் வாரியம் கைவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நிலத்தில், அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்களும்; கட்டடங்களின் மேல், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் நிலையம் அமைக்க, அதிக

சென்னை:தேனி, சேலம், ஈரோடில் உள்ள அணைகளுக்கு அருகே, தண்ணீரில் மிதக்கும், 'சோலார்' எனப்படும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை, மின் வாரியம் கைவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நிலத்தில், அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்களும்; கட்டடங்களின் மேல், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் நிலையம் அமைக்க, அதிக ஏக்கர் நிலம் தேவை. வெளிநாடுகளில், ஆறுகள், கடல் நீரின் மேல் தண்ணீரில் மிதக்கும் மிதவை சூரியசக்தி மின் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன.

வட மாநிலங்களில் ஆறுகளின் மேல் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. இதனால், நீர் ஆவியாகாது.அதனால், சேலம் மேட்டூர்; ஈரோடு பவானிசாகர் அணைகளின் அருகில் தலா, 100 மெகா வாட்; தேனி, வைகை அணை அருகில் தலா, 50 மெகா வாட் திறனில் தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது.திட்டச் செலவு, 1,120 கோடி ரூபாய்.

அந்த நிதியை உலக வங்கியிடம் இருந்து கடனாக பெற்று, 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன்' நிறுவனம் வாயிலாக செயல்படுத்த முடிவானது. தற்போது, அத்திட்டத்தை மின் வாரியம் கைவிட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தண்ணீரில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களின் செயல்பாடு, வெற்றிகரமாக அமையவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.எனவே, தேனி, சேலம், ஈரோடில் உள்ள அணைகளுக்கு அருகே, அந்த மின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை, தற்போதைக்கு செயல்படுத்த வேண்டாம் என முடிவாகியுள்ளது. அதற்கு மாற்றாக, நிலத்தில் அதிக எண்ணிக்கையில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X