பொது செய்தி

தமிழ்நாடு

தரமான சணல் உற்பத்தி ரூ.485 கோடியில் திட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஊட்டி: ''தரமான சணல் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 485 கோடி ரூபாய் மதிப்பில், 5 ஆண்டு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது,'' என, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் இணை செயலர் சஞ்சய் சரண் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் சார்பில், சாலை மேம்பாடு, மற்றும் நீர் மற்றும் மண்வள பாதுகாப்பில் சணல் பொருட்கள் பயன்படுத்துவது
தரமான சணல் உற்பத்தி ரூ.485 கோடியில்  திட்டம்

ஊட்டி: ''தரமான சணல் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 485 கோடி ரூபாய் மதிப்பில், 5 ஆண்டு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது,'' என, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் இணை செயலர் சஞ்சய் சரண் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் சார்பில், சாலை மேம்பாடு, மற்றும் நீர் மற்றும் மண்வள பாதுகாப்பில் சணல் பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நடந்தது.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் இணை செயலர் சஞ்சய் சரண் பேசியதாவது:நாட்டில் தற்போது உள்ள, 40 லட்சம் சணல் உற்பத்தியாளர்களை இந்த திட்டத்தில் படிப்படியாக இணைத்து தரமான சணல் உற்பத்தி செய்து அவர்கள் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.கோவிட் பெருந்தொற்று காலத்திலும் சணல் பொருட்கள் ஏற்றுமதி, 2,240 கோடி ரூபாய் அளவை எட்டியது. தரமான சணல் உற்பத்தியை ஊக்குவிக்க, 485 கோடி ரூபாயில், 5 ஆண்டு கால திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.தேசிய சணல் வாரிய ஆணையர் சந்தன் சக்ரவர்த்தி, இந்திய சணல் ஆணைய மேலாண் இயக்குனர் கமடோர் ஜோலி, மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X