பொது செய்தி

தமிழ்நாடு

17 நகரங்களுக்கு புதிய 'மாஸ்டர் பிளான்' டி.டி.சி.பி., நடவடிக்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் 17 நகரங்களுக்கு புதிய 'மாஸ்டர் பிளான்' எனப்படும், முழுமை திட்டங்களை உருவாக்கும் பணிகளை, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., விரைவில் துவங்க உள்ளது.சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகள், டி.டி.சி.பி., நிர்வாகத்தில் உள்ளன. இப் பகுதிகளில் நகரமைப்பு ரீதியாக வளர்ச்சி திட்டங்களுக்கு, டி.டி.சி.பி., வழிகாட்டுதலை வழங்கும்.மேலும், எந்தெந்த பகுதிகளில்

சென்னை:தமிழகத்தில் 17 நகரங்களுக்கு புதிய 'மாஸ்டர் பிளான்' எனப்படும், முழுமை திட்டங்களை உருவாக்கும் பணிகளை, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., விரைவில் துவங்க உள்ளது.
சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகள், டி.டி.சி.பி., நிர்வாகத்தில் உள்ளன. இப் பகுதிகளில் நகரமைப்பு ரீதியாக வளர்ச்சி திட்டங்களுக்கு, டி.டி.சி.பி., வழிகாட்டுதலை வழங்கும்.மேலும், எந்தெந்த பகுதிகளில் நிலங்களை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரையறையை, டி.டி.சி.பி., உருவாக்குகிறது. இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் முழுமை திட்டம் உருவாக்கப்படும்.

இதில், டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், 90 சதவீத பகுதிகளுக்கு முழுமை திட்டம் இல்லை. எஞ்சிய, 10 சதவீத பகுதிகளுக்கான முழுமை திட்டங்களும் தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப இல்லை.இது குறித்து, நகரமைப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய நிலவரத்துக்கு ஒவ்வாத நிலையில் உள்ள 17 நகரங்களின் முழுமை திட்டங்களை மறு ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அடுத்தபடியாக 17 நகரங்களுக்கு, புதிய முழுமை திட்டங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.நகரமைப்பு சார்ந்த கல்வி நிறுவனங்களை, இதில் முழுமையாக ஈடுபடுத்த ஆலோசித்து வருகிறோம். அத்துடன், 19 நகரங்களுக்கான முழுமை திட்டங்களை மறு ஆய்வு செய்யும் பணிகளையும், விரைவில் துவக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X