பொது செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோத மது விற்பனை 55 ஆயிரம் பேர் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரின் அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 55 ஆயிரத்து 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின்படி, உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், தீவிர

சென்னை:தமிழகம் முழுதும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரின் அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 55 ஆயிரத்து 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின்படி, உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர், தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, மூன்று மாதங்களில் 55 ஆயிரத்து 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 1.09 கோடி ரூபாய் மதிப்பிலான 2.73 லட்சம் லிட்டர் கள்ளச்சாரயம்; 70.43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4.70 லட்சம் லிட்டர் சாராய ஊறல்கள்; 32.86 லட்சம் மதிப்பிலான 32 ஆயிரத்து 866 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, 8.41 கோடி ரூபாய் மதிப்பிலான வெளி மாநில மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப் பட்டு உள்ளன.

இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3,039 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், 1,041 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் 2.86 கோடி ரூபாய் பெறப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.இனி, விழா காலங்கள் வருவதால், வாகன சோதனை மற்றும் மதுவிலக்கு சோதனை தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X