பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி பவனி இன்று புறப்பாடு

Added : அக் 02, 2021
Share
Advertisement
நாகர்கோவில்: போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று புறப்பட்டது. இன்று பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக பத்மனாபபுரம் சரஸ்வதிதேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் யானை, பல்லக்கு மற்றும் மேள தாளம்
நவராத்திரி பவனி இன்று புறப்பாடு

நாகர்கோவில்: போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று புறப்பட்டது. இன்று பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக பத்மனாபபுரம் சரஸ்வதிதேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் யானை, பல்லக்கு மற்றும் மேள தாளம் முழங்க பவனியாக நேற்று எடுத்து செல்லப்பட்டது. மன்னர் காலம் முதல் நுாற்றாண்டுகளாக இந்த முறை கடை பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக யானை தவிர்க்கப்பட்டு குறைவான பக்தர்கள் சுமந்து செல்லும் வகையில் பல்லக்குகள் தயார் செய்யப்பட்டு பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் புறப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்ததும் தேவிக்கு தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். மதியம் இந்த பவனி பத்மனாபபுரம் வந்தடைந்தது. இன்று காலை 8:30 மணிக்கு நவராத்திரி பவனி இங்கிருந்து புறப்படுகிறது. கேரள போலீசார் வர அனுமதி இல்லாததால் இங்கும் தமிழக போலீசார் மரியாதை செலுத்துகின்றனர். இந்த பவனி 5ம் தேதி மாலையில் திருவனந்தபுரம் சென்றடையும். 6ம் தேதி நவராத்திரி பூஜை துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X