பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று - அக்., 3, 1919

Added : அக் 02, 2021
Share
Advertisement
அக்., 3, 1919அமெரிக்காவின், டென்னஸி மாநிலம் முர்ப்ரீஸ்பரோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில், 1919 அக்., 3ம் தேதி பிறந்தவர், ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர். கடற்படையில், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார்.சிகாகோ பல்கலையில், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டென்னஸி, புளோரிடா, விர்ஜீனியா, ஜார்ஜ் மேசன் பல்கலைகளில் பேராசிரியராக பணியாற்றினார். பொது நிதி, பொதுக்கடன், ஓட்டுரிமை,

இதே நாளில் அன்று


அக்., 3, 1919



அமெரிக்காவின், டென்னஸி மாநிலம் முர்ப்ரீஸ்பரோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில், 1919 அக்., 3ம் தேதி பிறந்தவர், ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர். கடற்படையில், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார்.சிகாகோ பல்கலையில், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டென்னஸி, புளோரிடா, விர்ஜீனியா, ஜார்ஜ் மேசன் பல்கலைகளில் பேராசிரியராக பணியாற்றினார். பொது நிதி, பொதுக்கடன், ஓட்டுரிமை, அரசியலமைப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். தன் கருத்துகளை பரப்ப, 'பப்ளிக் சாய்ஸ், கான்ஸ்டிடியூஷனல் எகனாமிக்ஸ்' என்ற இதழ்களை துவக்கினார். பல மொழிகள் கற்றார்; பல்வேறு நுால்கள் எழுதியுள்ளார்.விர்ஜீனியாவில் அரசியல் பொருளாதாரம் பயிற்றுவிப்பதற்காக, 'தாமஸ் ஜெபர்சன்' என்ற பெயரில் கல்வி மையம் துவக்கினார். இவரின், 'பொது தேர்ந்தெடுத்தல் கோட்பாடு' பெரும் வரவேற்பை பெற்றது. உலகெங்கும் இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுகிறது. இதற்காக இவருக்கு, 1986-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவரது படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, 'தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆப் ஜேம்ஸ் எம்.புக்கானன்' என்ற தலைப்பில் நுாலாக வெளியிடப்பட்டது. 2013 ஜன., 9ம் தேதி, தன் 94வது வயதில் காலமானார். ஜேம்ஸ் எம்.புக்கானன் ஜூனியர் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X