பொது செய்தி

தமிழ்நாடு

காந்தியடிகள் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் பங்கேற்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: காந்தியடிகளின் 153வது பிறந்த நாள் விழா, நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.சென்னை மெரினா கடற்கரையில், நடந்த விழாவில், காந்தி சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்திற்கு, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.அங்கு சர்வோதய சங்கம்
காந்தியடிகள் பிறந்த நாள் கவர்னர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: காந்தியடிகளின் 153வது பிறந்த நாள் விழா, நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில், நடந்த விழாவில், காந்தி சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்திற்கு, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.அங்கு சர்வோதய சங்கம் சார்பில், நடந்த நுால் நுாற்பு வேள்வி மற்றும் காந்திய இசை பாடல் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

இதுபோல, மாநிலம் முழுதும், அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், காந்தியடிகள் சிலை மற்றும் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காமராஜர் நினைவு தினம்காமராஜரின் 46வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள, காமராஜர் நினைவிடத்தில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். இதேபோல், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பொது நல அமைப்பினரும், காமராஜர் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X