பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்கற்காலத்தை சேர்ந்த மண்பானை, குடுவைகள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கறுப்பு மண்பானை, குடுவைகளை வரலாற்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பார்த்து வியந்தனர்.கிருஷ்ணகிரி,அரசு ஆடவர் கலை கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட மாணவர் செல்வமணி மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவி பாரதி ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், குரும்பர் கொட்டாய் கிராமத்தில், ஈஸ்வரி என்பவர் வீட்டில் பல
 பெருங்கற்காலத்தை சேர்ந்த மண்பானை, குடுவைகள்

கிருஷ்ணகிரி:பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கறுப்பு மண்பானை, குடுவைகளை வரலாற்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பார்த்து வியந்தனர்.

கிருஷ்ணகிரி,அரசு ஆடவர் கலை கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட மாணவர் செல்வமணி மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவி பாரதி ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், குரும்பர் கொட்டாய் கிராமத்தில், ஈஸ்வரி என்பவர் வீட்டில் பல தலைமுறைகளாக பாதுகாத்து வைத்திருந்த, பெருங்கற்கால மண்பானை மற்றும் குடுவைகளை பார்த்து வியந்தனர்.

இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழைய கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால மிச்சங்கள் அதிகமாக காணப் படுகின்றன. தற்போது கள ஆய்வில் கிடைத்துள்ள கறுப்பு நிற மண்பாண்டம், மண் குவளைகள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இப்பானைகள் தற்போது கூட கறுப்பு நிறத்தில் மிகவும் பொலிவுடன் உள்ளது.

இதன் மூலம், அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களின் தொழில் நேர்த்தியும், கலைநயத்தையும், கைவண்ணத்தையும் கறுப்பு பானைகளில் காணமுடிகிறது. மேலும், தமிழ் மக்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றுவதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X