டெல்டா பாசன தேவைக்கு 102 டி.எம்.சி., நீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா பாசன தேவைக்கு 102 டி.எம்.சி., நீர் திறப்பு

Added : அக் 02, 2021
Share
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு, இதுவரை 102 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் நிலுவை 33 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி., ஆகும். தற்போது, அணையில், 35 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,018 கன அடி நீர்வரத்து நேற்று முன்தினம் கிடைத்தது.டெல்டா

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு, இதுவரை 102 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் நிலுவை 33 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி., ஆகும். தற்போது, அணையில், 35 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,018 கன அடி நீர்வரத்து நேற்று முன்தினம் கிடைத்தது.டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆற்று பாசனத்திற்கு 12 ஆயிரத்து 3 கன அடியும், கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வந்தது.

டெல்டா மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து, பாசனத்திற்கான நீர் திறப்பு, வினாடிக்கு 5,000 கன அடியாக நேற்று முன்தினம் மாலை குறைக்கப்பட்டது.இந்நிலையில், ஜூன், 12 முதல் நேற்று வரை, 102 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஜூன் முதல் செப்டம்பர் 30 வரை, கர்நாடகா 123.14 டி.எம்.சி., நீர் வழங்கி இருக்க வேண்டும்.ஆனால், 90 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் நிலுவை 33 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X