வேறு கட்சிக்கு தாவ தயாராகும் ம.ஜ.த., தலைவர்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:தொடர்ந்து நான்கு நாட்கள் கருத்தரங்கு நடத்தி கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த ம.ஜ.த., முயற்சித்த நிலையில், கட்சியின் மூத்த தலைகள் வேறு கட்சிக்கு தாவ தயாராக உள்ளனர்.அடுத்த சட்டசபை தேர்தலில் 120 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க ம.ஜ.த., திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்போதிருந்தே கட்சியை தயாராக்குகின்றனர்.தொடர் கூட்டம்ராம்நகர் பிடதி அருகிலுள்ள பண்ணை

பெங்களூரு:தொடர்ந்து நான்கு நாட்கள் கருத்தரங்கு நடத்தி கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த ம.ஜ.த., முயற்சித்த நிலையில், கட்சியின் மூத்த தலைகள் வேறு கட்சிக்கு தாவ தயாராக உள்ளனர்.

அடுத்த சட்டசபை தேர்தலில் 120 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க ம.ஜ.த., திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்போதிருந்தே கட்சியை தயாராக்குகின்றனர்.


தொடர் கூட்டம்

ராம்நகர் பிடதி அருகிலுள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தொடர் கூட்டம் நடத்துகிறார். பெங்களூரு சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்திலும் கூட்டம் நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.


கட்சித்தாவல்

ஆனால் ம.ஜ.த., மூத்த தலைவர்கள், வேறு கட்சிக்கு தாவ ஒற்றைக்காலில் நிற்கின்றனர். மைசூரின் சாமுண்டீஸ்வரி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, கோலார் எம்.எல்.ஏ., சீனிவாசகவுடா கட்சியை விட்டு விலகி, காங்கிரசுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம், கர்நாடக சட்ட மேலவையின் 25 இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே, பல தலைவர்கள் ம.ஜ.த., வுக்கு 'டாட்டா' காண்பிக்கும் வாய்ப்புள்ளது.

இன்னாள் எம்.எல்.சி., சந்தேஷ் நாகராஜ், 'அடுத்த முறை நான் ம.ஜ.த., சார்பில் போட்டியிட மாட்டேன்' என, கூறியுள்ளார். இவர் ம.ஜ.த.,விலிருந்து விலகி, பா.ஜ.,வுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.மற்றொரு எம்.எல்.சி., காந்தராஜ், தனக்கு சட்டசபை தேர்தலில் டிக்கெட் கொடுக்காததால், வெளியேற தயார் நிலையில் உள்ளார்.

தலைவர்களின் கட்சித்தாவலை பொருட்படுத்தாத ம.ஜ.த., மேலிடம் தேர்தலுக்கு தொண்டர்களை தயாராக்குவதிலும், மாற்று தலைவர்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

குமாரசாமி கூறியதாவது:கவலை இல்லை ம.ஜ.த.,வை விட்டு விலகி வேறு கட்சிக்கு செல்ல விரும்பும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் செல்லட்டும். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவரவர் தொகுதிக்கு மாற்று வேட்பாளர்களை நாங்கள் தயாராக்கியுள்ளோம். சந்தேஷ் நாகராஜ் கட்சியை விட்டு செல்வார் என்பது பல ஆண்டுக்கு முன்பே எனக்கு தெரியும்.

இது எனக்கு புதிய விஷயமல்ல. அவருக்கு வயதாகி விட்டது. உடல் ஆரோக்கிய பிரச்னையும் உள்ளது. அப்படியிருந்தும் அவரை இரண்டு முறை எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுத்தோம். காந்தராஜுக்கும், எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் அடுத்த தேர்தலுக்கு, மாற்று வேட்பாளரை தேர்வு செய்வோம். மைசூரு, மாண்டியா, துமகூரு, ஹாசன், பெங்களூரு ரூரலில், ம.ஜ.த., வலுவாகவுள்ளது. ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X