பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சு விலை 'பறக்கிறது': ஜவுளித்துறை அதிர்ச்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்: பருத்தி பஞ்சு விலை உயர்ந்து வருவதால், ஜவுளிதுறையினர் கவலை அடைந்துள்ளனர்.உலக அளவில், கடந்த ஆறு மாதங்களாக பருத்தி பஞ்சு விலை உயர்ந்து காணப்படுகிறது. செப்., முதல் வாரத்தில், சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு விலை, ஒரு கேண்டி (ஒரு கேண்டி - 356 கிலோ), 59 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இந்த விலை, தற்போது, 67 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.உலக சந்தையை பின்பற்றி,

திருப்பூர்: பருத்தி பஞ்சு விலை உயர்ந்து வருவதால், ஜவுளிதுறையினர் கவலை அடைந்துள்ளனர்.

உலக அளவில், கடந்த ஆறு மாதங்களாக பருத்தி பஞ்சு விலை உயர்ந்து காணப்படுகிறது. செப்., முதல் வாரத்தில், சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு விலை, ஒரு கேண்டி (ஒரு கேண்டி - 356 கிலோ), 59 ஆயிரம் ரூபாயாக இருந்தது; இந்த விலை, தற்போது, 67 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.உலக சந்தையை பின்பற்றி, உள்நாட்டிலும் பஞ்சு விலை எகிறியுள்ளது. செப்., மாதம் கேண்டி, 55 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, தற்போது, 60 ஆயிரத்தை எட்டியுள்ளது.

'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: சர்வதேச பஞ்சு விலை, 2011க்குப்பின், முதல் முறையாக தற்போது, அபரிமிதமான உயர்வு நிலையை எட்டியுள்ளது. உலக சந்தையை ஒட்டியே, இந்திய பருத்தி வர்த்தகமும் இயங்குகிறது. புதிய சீசன் துவக்கத்திலேயே, நமது நாட்டிலும், கேண்டி 60 ஆயிரம் ரூபாயை எட்டியிருப்பது, யாரும் எதிர்பாராதது.நுால் உற்பத்தியில், மூலப்பொருளான பருத்தியின் பங்களிப்பு, 68 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழக நுாற்பாலைகள் வசம், பழைய பஞ்சு கையிருப்பு தீர்ந்துள்ளது. தற்போது, அதிக விலை கொடுத்து பஞ்சு வாங்க வேண்டியுள்ளதால், நுாற்பாலைகளின், உற்பத்தி செலவினம் கணிசமாக அதிகரிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X