பொது செய்தி

இந்தியா

அரசியல் வாதிகள் சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவை தொகை பாக்கி

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:மாநில அரசின் பெரிய தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானிக்கு சொந்தமான இரண்டு சர்க்கரை ஆலைகள் உட்பட அரசியல்வாதிகளுக்கு சொந்தமான நான்கு சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கரும்பு பாக்கி வைத்துள்ளனர்.கர்நாடகாவில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வினியோகிக்கும் விவசாயிகள் அதற்கான பணத்தை பெறுவதே பெரும்பாடாக உள்ளது.சில ஆலைகளை தவிர மற்ற ஆலைகள்

பெங்களூரு:மாநில அரசின் பெரிய தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானிக்கு சொந்தமான இரண்டு சர்க்கரை ஆலைகள் உட்பட அரசியல்வாதிகளுக்கு சொந்தமான நான்கு சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கரும்பு பாக்கி வைத்துள்ளனர்.

கர்நாடகாவில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வினியோகிக்கும் விவசாயிகள் அதற்கான பணத்தை பெறுவதே பெரும்பாடாக உள்ளது.சில ஆலைகளை தவிர மற்ற ஆலைகள் கரும்பு பாக்கியை வழங்காமல் விவசாயிகளை இழுத்தடிக்கின்றன. பாக்கி தொகையை பெற்றுத் தரும்படி, விவசாயிகள் மன்றாடுகின்றனர்.

தனியார் ஆலைகள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஆலைகளும் கூட கரும்பு பாக்கி வைத்துள்ளன.அமைச்சர் முருகேஷ் நிரானி குடும்பத்துக்கு சொந்தமான இரண்டு சர்க்கரை ஆலைகள்; காங்., மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு சொந்தமான ஒரு ஆலை; காங்., - எம்.எல்.ஏ., ஆனந்த் சித்துநாமேகவுடாவின் ஒரு ஆலை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளன.

இது குறித்து சர்க்கரைத்துறை அமைச்சர் சங்கர் முனேனகொப்பா கூறியதாவது: விவசாயிகளுக்கு கரும்பு பாக்கி வைத்துள்ள சர்க்கரை ஆலைகள் இன்னும் இரண்டு நாட்களில், பணத்தை வழங்க வேண்டும். தவறினால் மாவட்ட கலெக்டர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

'பசவேஸ்வரா ஷூகர்', 'கோர் கிரீன் ஷூகர்ஸ்' ஆலைகளுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாக்கியை செலுத்த தவறினால் மற்ற ஆலைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
04-அக்-202109:58:55 IST Report Abuse
 Muruga Vel கரும்பு ஆலைகள் மகாராஷ்டிராவில் சரத் பவார் தயவில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவது ..திரும்ப தராமல் இழுத்தடிப்பது போன்ற தொழில் நுணுக்கங்களை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுத்து விட்டார்கள் போல இருக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X