ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா:சாக்லேட் தொழிலில் வெற்றி கனி

Added : அக் 02, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
தட்சிண கன்னடா:கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா செய்த, இளம் பொறியாளர் தம்பதி, சுயமாக சாக்லேட் தயாரித்து தொழில் ஆரம்பித்து வெற்றி கனியை பறித்து முன் உதாரணமாக திகழ்கின்றனர்.தட்சிண கன்னடா மாவட்டம் புத்துார் தாலுகா பெட்டம்பாடி ரெஞ்சா கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியா. இவரது மனைவி சுவாதி கல்லேஹுண்டி. ஒரு மகன் உள்ளார். இருவரும் பொறியாளர்கள். பெங்களூரில் நல்ல
ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா:சாக்லேட் தொழிலில் வெற்றி கனி

தட்சிண கன்னடா:கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா செய்த, இளம் பொறியாளர் தம்பதி, சுயமாக சாக்லேட் தயாரித்து தொழில் ஆரம்பித்து வெற்றி கனியை பறித்து முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் புத்துார் தாலுகா பெட்டம்பாடி ரெஞ்சா கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியா. இவரது மனைவி சுவாதி கல்லேஹுண்டி. ஒரு மகன் உள்ளார். இருவரும் பொறியாளர்கள். பெங்களூரில் நல்ல சம்பளத்துடன் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.கொரோனா ஊரடங்கின் போது, பெங்களூரு வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த கிராமத்துக்கு திரும்பினர்.

வருமானத்துக்கு அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தனர். அப்போது மனைவி ஒரு நல்ல ஐடியா சொன்னார்.அதாவது தங்கள் நிலத்தில் கோகோ பழங்கள் பயிரிட்டு, அதன் மூலம் சுயமாக சாக்லேட் தயாரிக்கலாம் என்று தீர்மானித்தனர். சாக்லேட் தயாரிக்க தேவையான இயந்திரம், தரம், ஏற்றுமதி, உரிமம் பெறுவது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்தனர்.கணவர், மெக்கானிக்கல் பொறியாளர் என்பதால் இயந்திரங்கள் வாங்கும் பணி எளிதில் முடிந்தது.

பின் சாக்லேட் தயாரிப்பது குறித்து இருவரும் பயிற்சி பெற்றனர். அதன் பின், தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடு செய்தனர்.கோகோ மரக்கன்றுதங்களுடைய 5 ஏக்கர் நிலத்தில் 450 கோகோ மரக்கன்றுகள் நட்டனர். விளைந்த கோகோ மூலம், வீட்டில் சிறிய தொழிற்சாலை அமைத்து சாக்லேட் தயாரிக்கின்றனர்.
'அனுத்தமா' என்று பெயரிட்டு, புதிய பிராண்ட் உருவாக்கியுள்ளனர்.சுவாதி மென்பொருள் பொறியாளர் என்பதால், தயாரித்த சாக்லேட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். எதிர்பார்த்ததை விட விற்பனை அமோகமாக நடக்கிறது.

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், அமேஜான் என பல சமூக வலை தளம் மூலம் விற்பனை செய்கின்றனர்.ரசாயனம், சர்க்கரை கலக்காமல் வெறும் வெல்லம் மட்டும் பயன்படுத்துகின்றனர். பாதாமி, மிளகு, ஆரஞ்சு, மாம்பழம் என 14 வகையான விதவிதமாக சுவைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகின்றன. எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் பெறுகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா செய்த, இளம் தம்பதி சுய தொழில் ஆரம்பித்து வெற்றி கனியை பறித்து முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-அக்-202110:38:53 IST Report Abuse
NicoleThomson ஹரி அவர்களே கோகோ செடிகளை விட பேரிச்சம் பழம் முயன்று பாருங்க அதன் இடையில் மிளகு முயலலாம் . இந்த கோகோவிற்கு தண்ணீர் அதிகளவு தேவை
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-அக்-202119:38:12 IST Report Abuse
NicoleThomsonஇல்லை என்றால் farmtechtube என்று ஒரு வலைதளத்தில் கலிபோர்னியான் அல்மாண்ட் என்ற பாதாம் வளர்த்து வருவது பற்றி போட்டு வருகிறார் ஒரு கருநாடக விவசாயி , பார்த்து பயன்பெறுங்க...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-அக்-202111:27:17 IST Report Abuse
NicoleThomsonஇதுதான் அவரது தளம் www.youtube.com/watch?v=N2QKLkmAN2A, இங்கே வந்தீர்கள் என்றால் எனது தோட்டத்திற்கும் வாருங்க...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-அக்-202122:41:44 IST Report Abuse
தமிழவேல் விதைகள் சீத்தாப்பழ சுளைகள் போல பெரிய தாக இருக்கும். அறுவடையின் போது அதிலிருந்து கசியும் ரசத்தை பிடித்து (தோட்டங்களில்) பருகுவதுண்டு. இளநீர்ப்போன்று சுவையாக இருக்கும். பிரேசில் நாட்டில் பருகியதுண்டு. வெயில் தேவையில்லை, வெளிச்சம், நிழல் போதும், பெரிய மரங்களுக்கு அடுத்தடுத்து நடுவார்கள். ஈரப்பதம் தேவை. கடல் மட்டத்திலிருந்து 600, 700 மீ. 20° C க்கு குறையக்கூடாது.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
03-அக்-202110:35:52 IST Report Abuse
Hari தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் கோகோ விளைச்சலுக்கு உகந்ததாக இருக்குமா என யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது. உதவுங்கள் நண்பர்களே.
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
04-அக்-202109:38:57 IST Report Abuse
Neutral Umpireஉங்க பேர் வூர் நாட்டு ராசியே சரியில்லையே...
Rate this:
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
04-அக்-202109:53:43 IST Report Abuse
Bushகசகசா பயிரிட்டு பாக்கலாம்...
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
04-அக்-202119:53:07 IST Report Abuse
RaajaRaja Cholanஒன்னும் கசமுசா ஆகிவிடாதே...
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
04-அக்-202123:32:22 IST Report Abuse
SaiCONTACT AGRICULTURE UNIVERSITY KOVAI GUIDANCE...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
05-அக்-202103:37:19 IST Report Abuse
Amal Anandanசகோதரர் ஹரி, கோகோ செடிக்கு அதிக அளவில் தண்ணீர் வேண்டும். விருதுநகர் பகுதிகளில் தண்ணீர் குறைவு அதனால் சிரமம்தான்....
Rate this:
Murugan - Bandar Seri Begawan,புருனே
05-அக்-202105:33:04 IST Report Abuse
Muruganஉங்கள் பகுதி வேளாண் வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். PA (Agriculture) PA (Agriculture) paagritocollector[at]gmail[dot]com Joint Director (Agriculture) Joint Director (Agriculture) agrivngr[at]gmail[dot]com 04562-252290 04562-252723 utive Engineer, Agricultural Engineering utive Engineer, Agricultural Engineering aeedeevnr[at]tn[dot]nic[dot]in 04562-252192 Deputy Director (Horticulture) Deputy Director (Horticulture) ddhvirudhunagar[at]yahoo[dot]com 04562-252393...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X