ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா:சாக்லேட் தொழிலில் வெற்றி கனி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா:சாக்லேட் தொழிலில் வெற்றி கனி

Added : அக் 02, 2021 | கருத்துகள் (11)
Share
தட்சிண கன்னடா:கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா செய்த, இளம் பொறியாளர் தம்பதி, சுயமாக சாக்லேட் தயாரித்து தொழில் ஆரம்பித்து வெற்றி கனியை பறித்து முன் உதாரணமாக திகழ்கின்றனர்.தட்சிண கன்னடா மாவட்டம் புத்துார் தாலுகா பெட்டம்பாடி ரெஞ்சா கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியா. இவரது மனைவி சுவாதி கல்லேஹுண்டி. ஒரு மகன் உள்ளார். இருவரும் பொறியாளர்கள். பெங்களூரில் நல்ல
ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா:சாக்லேட் தொழிலில் வெற்றி கனி

தட்சிண கன்னடா:கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா செய்த, இளம் பொறியாளர் தம்பதி, சுயமாக சாக்லேட் தயாரித்து தொழில் ஆரம்பித்து வெற்றி கனியை பறித்து முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் புத்துார் தாலுகா பெட்டம்பாடி ரெஞ்சா கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியா. இவரது மனைவி சுவாதி கல்லேஹுண்டி. ஒரு மகன் உள்ளார். இருவரும் பொறியாளர்கள். பெங்களூரில் நல்ல சம்பளத்துடன் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.கொரோனா ஊரடங்கின் போது, பெங்களூரு வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த கிராமத்துக்கு திரும்பினர்.

வருமானத்துக்கு அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தனர். அப்போது மனைவி ஒரு நல்ல ஐடியா சொன்னார்.அதாவது தங்கள் நிலத்தில் கோகோ பழங்கள் பயிரிட்டு, அதன் மூலம் சுயமாக சாக்லேட் தயாரிக்கலாம் என்று தீர்மானித்தனர். சாக்லேட் தயாரிக்க தேவையான இயந்திரம், தரம், ஏற்றுமதி, உரிமம் பெறுவது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்தனர்.கணவர், மெக்கானிக்கல் பொறியாளர் என்பதால் இயந்திரங்கள் வாங்கும் பணி எளிதில் முடிந்தது.

பின் சாக்லேட் தயாரிப்பது குறித்து இருவரும் பயிற்சி பெற்றனர். அதன் பின், தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடு செய்தனர்.கோகோ மரக்கன்றுதங்களுடைய 5 ஏக்கர் நிலத்தில் 450 கோகோ மரக்கன்றுகள் நட்டனர். விளைந்த கோகோ மூலம், வீட்டில் சிறிய தொழிற்சாலை அமைத்து சாக்லேட் தயாரிக்கின்றனர்.
'அனுத்தமா' என்று பெயரிட்டு, புதிய பிராண்ட் உருவாக்கியுள்ளனர்.சுவாதி மென்பொருள் பொறியாளர் என்பதால், தயாரித்த சாக்லேட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். எதிர்பார்த்ததை விட விற்பனை அமோகமாக நடக்கிறது.

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், அமேஜான் என பல சமூக வலை தளம் மூலம் விற்பனை செய்கின்றனர்.ரசாயனம், சர்க்கரை கலக்காமல் வெறும் வெல்லம் மட்டும் பயன்படுத்துகின்றனர். பாதாமி, மிளகு, ஆரஞ்சு, மாம்பழம் என 14 வகையான விதவிதமாக சுவைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகின்றன. எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் பெறுகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை ராஜினாமா செய்த, இளம் தம்பதி சுய தொழில் ஆரம்பித்து வெற்றி கனியை பறித்து முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X