பொது செய்தி

இந்தியா

பள்ளிகள் திறப்பு :கூடுதல் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., முடிவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவின், அனைத்து தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில், வகுப்புகளை முழுமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. பஸ்சில் வரும் மாணவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும்படி நடத்துனர், ஓட்டுனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கூடுதல் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. கொரோனா குறைந்து வருவதால் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்கப்பட்டது. காலை

பெங்களூரு:கர்நாடகாவின், அனைத்து தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில், வகுப்புகளை முழுமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

பஸ்சில் வரும் மாணவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும்படி நடத்துனர், ஓட்டுனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கூடுதல் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. கொரோனா குறைந்து வருவதால் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்கப்பட்டது. காலை முதல் மதியம் வரை, வகுப்புகள் நடக்கிறது.இனி வகுப்புகளை, முழுமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., அதிகாரியொருவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் அரசு விதித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் நுட்பம், மருத்துவம், டிப்ளமோ கல்லுாரிகள் செயல்படுகின்றன.

பெங்களூரு மற்றும் புறநகர்ப்பகுதிகளில், மக்களின் நடமாட்டம், வர்த்தக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.அக்டோபர் 4 முதல், கூடுதலாக பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படும். ஏ.சி., பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். பஸ்சில் வரும் மாணவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளும்படி, நடத்துனர், ஓட்டுனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X