முதல்வர் விசிறி!

Added : அக் 02, 2021
Share
Advertisement
முதல்வர் விசிறி!காவிக் கட்சியின் 'மாஜி' முதல்வர் எடிஜி., க்கு அரசியல் செயலராக இருந்த ஹொன்னாளி அசம்பிளிக்காரர், மந்திரி பதவி வேணும்னு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், அவரோட முயற்சி பிரயோஜனப்படல. அதனால் முதல்வருக்கு விசிறியாகி விட்டார். இவரை பிழைக்க தெரிஞ்சவருன்னு வெளியே பேசிக்கிறாங்க. கட்சி மேலிடம், புதிய முதல்வருக்கு, முழு பவர் கொடுத்திருக்காங்க.இதுக்கு கட்சி

முதல்வர் விசிறி!
காவிக் கட்சியின் 'மாஜி' முதல்வர் எடிஜி., க்கு அரசியல் செயலராக இருந்த ஹொன்னாளி அசம்பிளிக்காரர், மந்திரி பதவி வேணும்னு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், அவரோட முயற்சி பிரயோஜனப்படல. அதனால் முதல்வருக்கு விசிறியாகி விட்டார். இவரை பிழைக்க தெரிஞ்சவருன்னு வெளியே பேசிக்கிறாங்க. கட்சி மேலிடம், புதிய முதல்வருக்கு, முழு பவர் கொடுத்திருக்காங்க.இதுக்கு கட்சி மூத்த தலைவர்கள் எல்லாம் எதிர்ப்புகளை, மேலிடம் வரையில் எட்ட வைத்தார்கள். இந்த பட்டியலில் இல்லாமல் ஒதுங்கி இருந்த ஹொன்னாளிக்காரர், புதிய முதல்வர் தலைமையின் தேர்தல் பணிக்கு ஆதரவாக செயல்பட போவதாக அறிவித்து, ஆதாயம் தேட துவங்கிட்டார்.முதல்வரின் விசிறி லிஸ்ட்டில் இவரும் தன்னை அடையாளம் காட்டுகிறார்.

கை பக்கம் தாவல்!

மாநகராட்சியின் புல்லுக்கட்டு கட்சியின் துணை மேயராக இருந்த ஆனந்தமானவர், அவரோட கட்சி மீது நீண்ட நாட்களாக, வெறுப்பாகவே இருந்து வந்தார்.இவர் புல்லுக்கட்டு கட்சியில் இருந்து வெளியேறி, கை கட்சியில் சேர தீர்மானித்து, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். மாநகராட்சி தேர்தலில் தாம் கை கட்சி வேட்பாளராக போட்டியிட சீட் உறுதி படுத்திக்கொண்டார்.கை கட்சி மாநிலத்தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்து விட்டார்.

மேலும் ஒரு வழக்கு!

பூங்கா நகர் மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் தாமதம் ஏற்படுத்தி வராங்க. சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்கு இருந்து வருது.விரைந்து தேர்தலை நடத்த வேணும்னு ரெண்டு பெரிய வக்கீல்கள் மேலும் ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் போட்டிருக்காங்க.தொகுதி அசம்பிளிக்காரங்களுக்கும், ஆபிசருங்களுக்கும் மாநகராட்சி தேர்தலை நடத்தனும்னு விருப்பம் இருப்பதா தெரியல; எதையாவது காரணம் காண்பித்து, எலக் ஷனே நடத்தாமல் 'டிலே' செய்ய 'ரூட்' தேடுறதே வேலையா கவனிக்கிறாங்க.மாநகராட்சி தேர்தலை நடத்த முன்னாள் 'மேயர்கள்' சிலர் கட்சிகளை மறந்து ஒண்ணு சேர்ந்திருக்காங்க. தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் குறியா இருக்காங்க.

'டிக்கெட்' கேட்டு தரிசனம்!
மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 'மாஜி' கவுன்சிலர்களும், புதுசா தேர்தலில் போட்டியிட விரும்புறவங்களும் ஒரு வருஷமா கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவழிச்சி சோகமா இருக்குறாங்க.கடன்பட்டாவது வார்டில் செலவழித்து கவுன்சிலர் ஆக வேணும்னு வாக்காளர்களை நழுவ விடாதபடி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வர்ராங்க; நன்றாகவே கவனிக்குறாங்க.கட்சி டிக்கெட் கிடைக்க தலைவர்கள் வீடுகளை சுற்றி சுற்றி தரிசனம் செய்றாங்க. சிலர் கோவில் கோவிலாக சென்று சுவாமிக்கு பூஜைகள் செய்து வர்ராங்க.ஆளுங் கட்சியில் ஆல்ரெடி வேட்பாளர் யார், எவர் என்பதை தீர்மானித்து விட்டதாக இவர்களோடு ஸ்டேட் ஹெட் ஆபிஸ் தகவல் தெரிவிக்குது. கை கட்சியில் எதுவுமே உறுதிபடுத்தாமல் அலை கழிக்கிறாங்களாம். ஏமாற்றுவாங்களோன்னு அச்சம் அலைபாயுதாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X