பொது செய்தி

தமிழ்நாடு

குவாரி உரிமையாளர்களை கைது செய்ய வலியுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கரூர்: ''கரூர் மாவட்டத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்த கிரானைட் குவாரி, கல் குவாரி உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான முகிலன் கூறினார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்த முகிலன், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட், செப்டம்பர்

கரூர்: ''கரூர் மாவட்டத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டங்களில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்த கிரானைட் குவாரி, கல் குவாரி உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான முகிலன் கூறினார்.


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்த முகிலன், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரூர் மாவட்டத்தில், நான்கு கிரானைட் குவாரி, நான்கு கல் குவாரிகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தன. அதில், எட்டு குவாரி உரிமையாளர்களும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தாக்கல் செய்துள்ள மதிப்பீட்டு அறிக்கையில், போலியான ஆவணங்களை இணைத்துள்ளனர். அதில் காற்று, நீர், ஒலி, மண் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை வழங்கியதாக கூறப்படும் தனியார் நிறுவனம் நாமக்கல்லில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கவில்லை. இல்லாத நிறுவனத்தின் பெயரில், போலியான ஆவணங்களை கருத்து கேட்பு கூட்டங்களில் தாக்கல் செய்த, எட்டு குவாரி உரிமையாளர்களையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X