பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: பொதுமக்கள் அதிர்ச்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகராட்சி கொளந்தானூர் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், ஏழு பிளாக்குகள் கொண்ட, 112 குடியிருப்புகள் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டன. அதில் தற்போது கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், 'டி' பிளாக் கட்டடத்தில் உள்ள, 81 முதல், 112 வீடுகளில் குடியிருப்பவர்கள் பராமரிப்பு பணி மற்றும் பருவமழை காரணமாக உடனடியாக காலி செய்து விட்டு

கரூர்: கரூர் நகராட்சி கொளந்தானூர் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், ஏழு பிளாக்குகள் கொண்ட, 112 குடியிருப்புகள் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டன. அதில் தற்போது கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், 'டி' பிளாக் கட்டடத்தில் உள்ள, 81 முதல், 112 வீடுகளில் குடியிருப்பவர்கள் பராமரிப்பு பணி மற்றும் பருவமழை காரணமாக உடனடியாக காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நேற்று காலை வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்டவீடுகளில் குடியிருப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். வீட்டை பராமரிப்பு செய்து தருமாறு பல முறை கோரிக்கை வைத்தும் யாரும் கண்டுகொள்ளவி ல்லை. தற்போது, மாற்று இடம் தராமல் காலி செய்ய சொல்கின்றனர். வீட்டை காலி செய்யும் திட்டத்தை கைவிட்டு, வீடுகளை உடனடியாக பராமரிக்க வேண்டும். வீடுகளை காலி செய்ய மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X