பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் 11 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடந்த இரண்டு நாட்களாக, 11 ஆயிரம் கன அடியை தாண்டிய நிலையில் உள்ளது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 11 ஆயிரத்து, 836 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 11 ஆயிரத்து, 732 கன அடியாக வரத்து இருந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 712 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடந்த இரண்டு நாட்களாக, 11 ஆயிரம் கன அடியை தாண்டிய நிலையில் உள்ளது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 11 ஆயிரத்து, 836 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 11 ஆயிரத்து, 732 கன அடியாக வரத்து இருந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 712 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடியும் திறக்கப்பட்டது. அணைப்பகுதியில், 44 மி.மீ., மழை பெய்தது.




அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 225 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 400 கன அடி தண்ணீரும், புதிய பாசனவாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 82.85 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X