பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத் தடுப்பு பணி ரூ.392.16 கோடி ஒதுக்கீடு!

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், புயல் மழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில், சாலைகள் அதிகம் சேதமடைந்தன.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, சிறிய பாலங்கள், வடிகால்கள் போன்றவற்றை சீரமைக்கவும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், 392.16 கோடி நிதி ஒதுக்கக் கோரி, நெடுஞ்சாலை துறை

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், புயல் மழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில், சாலைகள் அதிகம் சேதமடைந்தன.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, சிறிய பாலங்கள், வடிகால்கள் போன்றவற்றை சீரமைக்கவும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், 392.16 கோடி நிதி ஒதுக்கக் கோரி, நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

பரிசீலனை செய்த அரசு, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு, 271.75 கோடி; முக்கிய மாவட்ட சாலைகளுக்கு, 53.63 கோடி; இதர மாவட்ட சாலைகளுக்கு, 66.78 கோடி என மொத்தம், 392.16 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.ஏற்கனவே, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 312.16 கோடி ரூபாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நெடுஞ்சாலை துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X