வெள்ளியணையில் நிழற்கூடம் அவசியம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, வெள்ளியணையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே, வளர்ந்து வரும் பகுதியாக வெள்ளியணை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அதிரசம், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக கூடலூர், பாளையம், குஜிலியம் பாறை, கோவிலூர், எரியோடு வழியாக

கரூர்: கரூர் அருகே, வெள்ளியணையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே, வளர்ந்து வரும் பகுதியாக வெள்ளியணை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அதிரசம், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக கூடலூர், பாளையம், குஜிலியம் பாறை, கோவிலூர், எரியோடு வழியாக திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் வெள்ளியணை பிரதான சாலையில் போக்குவரத்து எப்போதும் பிசியாக இருக்கும். கோடைக்காலங்களில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக் காலத்தில், பயணிகள் நிழற்கூடம் இல்லாததால், பஸ் ஸ்டாப்பில் உள்ள கடைகளை தேடி பொதுமக்கள் ஓடும் நிலை உள்ளது. குறிப்பாக, வெள்ளியணை அரசு மேல் நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடம், படிகள் உடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. திண்டுக்கல்-கரூர் சாலை வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை. இதனால், வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X