சித்தராமையாவுக்கு காங்.,வரலாறு தெரியாது : சமூகநலத்துறை அமைச்சர்

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெலகாவி:''சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறே தெரியாது. அதிகாரம், நாற்காலி ஆசைக்காக மட்டுமே அவர் அந்த கட்சியில் சேர்ந்தவர்,'' என மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.மஹாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, பெலகாவி சங்கமேஸ்வரத்தில் உள்ள ஜெகஜீவன்ராம் பூங்காவில், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நாராயணசாமி, துாய்மை

பெலகாவி:''சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறே தெரியாது. அதிகாரம், நாற்காலி ஆசைக்காக மட்டுமே அவர் அந்த கட்சியில் சேர்ந்தவர்,'' என மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்

.மஹாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, பெலகாவி சங்கமேஸ்வரத்தில் உள்ள ஜெகஜீவன்ராம் பூங்காவில், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நாராயணசாமி, துாய்மை பணியில் ஈடுபட்டார்.

பின், அவர் கூறியதாவது:மகளிர் மேம்பாட்டுக்காக சட்ட மசோதா கொண்டு வந்த அம்பேத்கரிடம், காங்கிரஸ் அரசு ராஜினாமா கடிதம் பெற்றதை நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின், 57 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. அவர்கள் ஆட்சி காலம் முழுதும், ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரிடையே சண்டை மூட்டியது.

அவர்கள் ஆட்சி காலத்தில், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், சத்திஸ்கர், நாகாலாந்து மாநிலங்களில் உள்நாட்டு சண்டை அதிகமானதை பார்த்துள்ளோம்.இது தான் காங்கிரஸ் கட்சியின் சாதனை என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கை, ஆர்.எஸ்.எஸ்., கொள்கை என்கிறார்.

எங்காவது ஆர்.எஸ்.எஸ்., குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதா.சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறே தெரியாது. அதிகாரம், நாற்காலி ஆசைக்காக மட்டுமே அவர் அந்த கட்சியில் சேர்ந்தவர்.சமூக நலத்துறை உறைவிட பள்ளிகளில் நுாலகம், கணினி பயிற்சி மையம், திறக்கும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-அக்-202106:00:11 IST Report Abuse
Milirvan என்னங்க.. இப்புடி தேங்கா ஒடச்சாப்புல பளிச்'சின்னு சொல்லிப்புட்டீங்களே.. கான்கிராஸும் நானும் எப்புடீங்க அரசியல் பண்ணி வவுத்த கழுவுறது..? அவ்வ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X