அரசியல் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கண்டுகொள்ளாத பி.டி.ஓ., 'டிரான்ஸ்பர்'

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆனைமலை: உள்ளாட்சி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமீறலை கண்டுகொள்ளாத பி.டி.ஓ., பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், காலியாக உள்ள தலைவர் பதவியை நிரப்ப, உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த, 25ம் தேதி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த பிரசாரத்துக்கு, 50க்கும் மேற்பட்ட

ஆனைமலை: உள்ளாட்சி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமீறலை கண்டுகொள்ளாத பி.டி.ஓ., பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், காலியாக உள்ள தலைவர் பதவியை நிரப்ப, உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த, 25ம் தேதி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த பிரசாரத்துக்கு, 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சியினர் கூட்டமாக வந்ததைக் கண்டித்து தி.மு.க., அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

மனுவில், 'ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆனைமலை பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய அதிகாரியை நியமித்து நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.இதையடுத்து, கோவை கலெக்டர் சமீரன் உத்தரவுப்படி, தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆனைமலை பி.டி.ஓ., லதா, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு மாற்றப்பட்டார்.

இவருக்கு பதிலாக, சாய்ராஜ் பொறுப்பேற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓட்டு சேகரிப்பின் போது, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது; போலீசில் புகாரும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை, மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆபிரகாம், திவான்சாபுதுார் ஊராட்சியில், 12 ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X