பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து நிறுவனங்களுடன், சென்னை ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தை வணிக மயமாக்கும் வகையில், ஐந்து நிறுவனங்களுடன், சென்னை ஐ.ஐ.டி., ஒப்பந்தம் செய்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி., செய்திக்குறிப்பு: இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் வகையில், ஐந்து தனியார் நிறுவனங்களுடன், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இதன் வாயிலாக, விண்வெளிக்கு செயற்கை கோள்களை

சென்னை: இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தை வணிக மயமாக்கும் வகையில், ஐந்து நிறுவனங்களுடன், சென்னை ஐ.ஐ.டி., ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., செய்திக்குறிப்பு: இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் வகையில், ஐந்து தனியார் நிறுவனங்களுடன், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இதன் வாயிலாக, விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பும் ராக்கெட் வடிவமைத்தல், செயற்கை கோள்களை ஏவுதல், விண்வெளி மையம் அமைக்கும் தொழில்நுட்பங்களை ஏற்படுத்துதல், விண்வெளி கழிவுகள் மேலாண்மை, செயற்கை கோள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சமாளித்தல், விண்வெளி குறித்த தகவல் தரவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இந்த பணிகளை, சென்னை ஐ.ஐ.டி.,யின், 'ஏரோஸ்பேஸ்' இன்ஜினியரிங் துறை தலைவர் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி, தொழில்நுட்ப அறக்கட்டளை முதன்மை செயல் அதிகாரி சங்கர்ராமன் உள்ளிட்டோர் மேற்கொள்வர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X