பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: ஊட்டி வியாபாரி மகள் சாதனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஊட்டி வியாபாரியின் மகள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாநிலத்தில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் - லட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் சுவாதிஸ்ரீ. இவர் பள்ளிப் படிப்பை ஊட்டியில் முடித்தார். தஞ்சாவூர் வேளாண்மை கல்லுாரியில் பி.எஸ்.சி., முடித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.ஐ.ஏ.எஸ்.,
ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: ஊட்டி வியாபாரி மகள் சாதனை

ஊட்டி வியாபாரியின் மகள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாநிலத்தில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் - லட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் சுவாதிஸ்ரீ. இவர் பள்ளிப் படிப்பை ஊட்டியில் முடித்தார். தஞ்சாவூர் வேளாண்மை கல்லுாரியில் பி.எஸ்.சி., முடித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் சுவாதிஸ்ரீ, தேசிய அளவில், 126வது இடத்தையும், மாநில அளவில், 3-ம் இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

சுவாதி ஸ்ரீ கூறுகையில்,''இந்த வெற்றிக்கு எனது பெற்றோர் முக்கிய காரணம். சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் சிறந்த பயிற்சி பெற்றேன். நீலகிரியை சேர்ந்த நான் வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது,'' என்றார்.

தியாகராஜன் கூறுகையில்,''ஊட்டியில் சிறிய கடை வத்து வியாபாரம் செய்து வந்தேன். எங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, சில ஆண்டுகளுக்கு முன், கோவை சென்றேன். அதற்கான பலன் கிடைத்ததால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X