காந்தி ஜெயந்தி: மனைவிக்கு கதர் சேலை முதல்வர் பரிசளிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:தேசப்பிதா மஹாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது மனைவிக்கு கைகளால் நெய்த கதர் சேலை வாங்கினார்.மஹாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, கதர் ஆடைகளை வாங்கி, நெசவாளர்களை ஊக்குவிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரு
காந்தி ஜெயந்தி: மனைவிக்கு கதர் சேலை முதல்வர் பரிசளிப்பு

பெங்களூரு:தேசப்பிதா மஹாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது மனைவிக்கு கைகளால் நெய்த கதர் சேலை வாங்கினார்.

மஹாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி, கதர் ஆடைகளை வாங்கி, நெசவாளர்களை ஊக்குவிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள காதி எம்போரியம் கடைக்கு சென்றார்.அப்போது, தனது மனைவிக்கு இளஞ்சிவப்பு கதர் சேலையை வாங்கினார்.
உடனிருந்த, அமைச்சர்கள் எம்.டி.பி.நாகராஜ், கோவிந்த் கார்ஜோள், மாநில பா.ஜ., துணை தலைவர் விஜயேந்திரா ஆகியோரும் தங்கள் மனைவிக்கு சேலை வாங்கினர்.அனைவருக்கும் சேர்த்து முதல்வரே, 16 ஆயிரத்து 31 ரூபாய் ரொக்கம் வழங்கினார். பணம் கொடுக்க வேண்டாம் என்று மற்றவர்கள் கூறினாலும், காந்தி ஜெயந்தி பரிசாக கொடுத்து விடுங்கள் என்று அன்புடன் கூறி சம்மதிக்க வைத்தார்.வேறு வழியின்றி முதல்வர் அன்புக்கு அனைவரும் கட்டுப்பட்டு சேலை வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X