பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மாவட்டங்களில் மருந்து கிடங்குகள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: புதிய மாவட்டங்களில், தலா 6 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு கிடங்குகள் கட்டப்பட உள்ளன.மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள், மருத்துவ பணிகள் கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளை இருப்பு வைத்து, தேவைக்கு ஏற்ப வழங்க 32 இடங்களில்

சென்னை: புதிய மாவட்டங்களில், தலா 6 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு கிடங்குகள் கட்டப்பட உள்ளன.

மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள், மருத்துவ பணிகள் கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளை இருப்பு வைத்து, தேவைக்கு ஏற்ப வழங்க 32 இடங்களில் கிடங்குகள் உள்ளன.செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு, பிற மாவட்ட கிடங்குகளில் இருந்து மருந்துகள் எடுத்து வரப்படுகின்றன.எனவே, இம்மாவட்டங்களில் தலா 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக, தேசிய சுகாதார இயக்கத்திடம் நிதி கேட்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X