பொது செய்தி

இந்தியா

கதர் துணியால் தயாரான பிரமாண்ட தேசியக்கொடி

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:மஹாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கின் லே பகுதியில் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டது. மஹாத்மா காந்தியின் 152வது பிறந்த நாள் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, லடாக்கின் லே பகுதியில் மலைப் பிரதேசத்தில் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசிய கொடியை, இந்திய ராணுவத்தினர்
 கதர் துணியால் தயாரான பிரமாண்ட தேசியக்கொடி

புதுடில்லி:மஹாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கின் லே பகுதியில் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டது.

மஹாத்மா காந்தியின் 152வது பிறந்த நாள் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, லடாக்கின் லே பகுதியில் மலைப் பிரதேசத்தில் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசிய கொடியை, இந்திய ராணுவத்தினர் நேற்று நிறுவினர். இந்த கொடி, 225 அடி நீளம், 150 அடி அகலம், 1,000 கிலோ எடையிலானது.

காதி நிறுவனம் மற்றும் கிராம தொழில் ஆணையமும் சேர்ந்து தயாரித்துள்ளன. லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னரான ஆர்.கே.மாத்துார் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பார்வைக்கு இதை திறந்து வைத்தார். ராணுவ தலைமை தளபதி நரவானேவும் பங்கேற்றார்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நம் நாட்டின் தேசிய கொடிக்கு மேலும் பெருமை சேர்க்கப்பட்டுஉள்ளது. கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசிய கொடி, லடாக்கின் லே பகுதியில் நிறுவப்பட்டுஉள்ளது. இந்திய நாட்டையும், இங்குள்ள கைவினை கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X