வெற்றி பெறுவாரா மம்தா பானர்ஜி?

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோல்கட்டா:பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் வெற்றி பெற்று, மேற்கு வங்க முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும். இதனால், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி திரிணமுல்
 வெற்றி பெறுவாரா மம்தா பானர்ஜி?

கோல்கட்டா:பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் வெற்றி பெற்று, மேற்கு வங்க முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.

இதனால், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 213 தொகுதிகளை கைப்பற்றி திரிணமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

எனினும் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். ஆறு மாதத்துக்குள் மேற்கு வங்கத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே, அவர் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மம்தா போட்டியிட வசதியாக பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த மாநில வேளாண் அமைச்சர் சோபன்தேவ், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்கத்தில் பவானிபூர் உட்பட காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கு, செப்., 30ல் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.பவானிபூர் தொகுதியில் திரிணமுல் காங்., சார்பில் மம்தா பானர்ஜி, பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., சார்பில் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பிரசாரத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.பலத்த பாதுகாப்புடன் பவானிபூர் தொகுதியில் கடந்த 30ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 53 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவியில் மம்தா நீடிப்பாரா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
03-அக்-202105:19:25 IST Report Abuse
Milirvan மூர்க்க குண்டர்களின் அச்சுறுத்தல், 53 சதமானமாக குறைந்த வோட்டு பதிவிலேயே தெரிகிறது.. மக்கள் பீதியில் சாவடிக்கே வரவில்லை.. முந்தைய பதிவில் 67 சதமானம்.. வந்தவர்களும் வராதவர்களுக்கு யாரென்பது புரிகிறதா..? பேகத்தின் பேயாட்சி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X